கதைகள், கட்டுரைகள்,
இட்டு கட்டிய வேதம், புராணம் மூலம் மற்றவரை அடிமை செய்ய முடியுமென்றால், ஏன் மாற்று
கதைகள், கட்டுரைகள், வேதம், புராணம் மூலம் வெற்றி பெற்று ஒரு புதிய சமூகம் உருவாக முடியாது
?
நிச்சயம் முடியும்.
நவீன மனு சாஸ்திரம்,
நவீன வேதங்கள், நவீன புராணங்கள் இவையே நமது இலட்சியம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நந்தன் எனுமொரு
ஞானி ;;
சோழ வள நாட்டை
நந்தி வளவன் ஆண்டு வந்தான். நந்தி வளவன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான
பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், நித்தியானந்த விஷ்ணு சர்மா. தன்னுடைய
பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார்.
தெனாலி மாறன் அமைச்சர். ஓரளவு நியாயமானவர்
என்றாலும் பயந்த குணம், இப்போது நந்தி வர்மனை மீறமுடியாத நிலை.
காளிங்கன் , காலத்தின்
கோலத்தால் தாழ்த்தப்பட்ட , நேர்மையான, கடவுளிடம் பக்தி கொண்ட பறையர் இனத்தை சார்ந்தவன்.
கொற்றவை அவன் குல தெய்வம். காளிங்கன் , தெனாலி மாறனின் நிலத்தில் வேலை செய்து போகத்திற்கு
20 மூட்டை நெல் அளிப்பான். வறட்சி எதுவும் விளையவில்லை என்றால் கூட 20 மூட்டை நெல்லை
கடன்வாங்கியாவது அளந்து விடுவான்.
ஒருமுறை அரசனுக்கு பெரிய ஒரு சந்தேகம் வந்தது. யாராலும் தீர்க்க முடியவில்லை.
விஷ்ணு சர்மா, தெனாலி மாறன் இவர்களின் பதில்களும் அரசனுக்கு திருப்தியாக இல்லை.
பறை அறிவிக்கப்பட்டது
‘ அரசன் ஐயத்தை தீரப்பவர்ககு 100 வராகன் பரிசு, அரசு மனைக்கு வந்து ஐயத்தை தீர்த்து
பரிசை பெற்று செல்லலாம் ‘
கொற்றவை அருளினால்
ஐயம் தெளிவு பெற்ற காளிங்கன் தன் தெளிவை மாறனிடம் கூற,
அதை அவர் அரசனிடம்
கூற ஐயம் தீர்ந்து
‘உமக்கு எப்படி
தெளிவு வந்தது ? யார் கூறியது’ என்றான்.
தெனாலி மாறன் உண்மை
சொல்ல முற்பட, விஷ்ணு சர்மா தடுத்து விட்டான். ‘ராஜாதி ராஜனே, தெய்வமே உனக்காக மாறனுக்கு
அருளியது’ என்று கூற அரசனும் சந்தோசப்பட்டு 100 வராகன் பரிசை அளித்தான். விஷ்ணு சர்மா அதில் பாதி எடுத்துக்கொள்ள, காளிங்கனும்,
அவன் மனைவியும், 3 குழந்தைகளும் பாதி வயிற்றுக்கு கூழ் குடித்து தூங்கப்போனார்கள்.
அரசனின் ஐயம் இதுதான்.
‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா ?’
காளிங்கன் ஒரு
சிறிய விளக்கை ஏற்றச் சொன்னான். ‘இந்த சுடரில் சூடு இருக்கிறதா ? எனக்கேட்டான்.
‘இருக்கலாம், ,
ஆனால் சுடர் சிறிதாக உள்ளதால் உணர முடியவில்லை’
தெனாலி மாறனிடம்
காளிங்கன் கூறினான்.
‘கடவுள் இருக்கிறார்,
உணர்ந்தால் தெரியும்’