Saturday, 12 October 2013

இராமன் எனும் திராவிடன் - இனி ஒரு புது விதி செய்வோம் !!

இராமன் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
சீதாப் பிராட்டியார் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
இராமாயணம் சமஸ்கிருத்தில் இருப்பதனாலேயோ, கம்பர் வால்மீகி இராமாயணத்தை முன்னூலாக கொண்டதனாலேயோ  இராமன் வட தெய்வம் ஆகி விட மாட்டான்.
கரிய நிற இராமனை தெய்வமாக இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?
மற்ற கரிய நிற தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும் அதே சமஸ்கிருத்தில் இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?


இதற்கான சாத்தியக்கூறுகள் இரண்டு.
1.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டை மற்றவரிடம் இருந்து எடுத்துக் கொள்கிறான்.
2.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும், முருகனையும் கொண்டாடுகிறான்.
கிருஷ்ணன் ( கண்ணன் ), சிவன், முருகன் எல்லோரும் தமிழ் தெய்வங்கள்தான். சங்க நூல்களை படிக்கவும். முதல் கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அகம், புறம், குறள், தொல்காப்பியம் என வாழ்வியல், மொழியியலில் ஆயிரம் ஆயிரம் நூற்களை விட்டுச் சென்ற தமிழன்,  தெய்வ வழிபாட்டில் மாபெரும் நூற்களை விட்டுச் செல்லவில்லை. ஏன் ? ஏனென்றால் தன் தெய்வ வழிபாட்டிற்கு தமிழுக்கு ஈடாக, அவன் சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் வழிபாட்டை அதில் மாற்றி, அந்த நூல்களை ‘மறை’ என்றான்.
இங்கே மாற்றான் எவரும் வரவில்லை.
Refer Indologist Pandit Vamadeva Shastri in http://www.vedanet.com/2012/06/myth-of-aryan-invasion-update-2001/ and other blogs for an overview on the theory of Aryans..
இராமாயணத்தில், இராவணனுக்கு பத்து தலைகள். ஏன் பத்து தலைகள் ? இதற்கான ஆதாரங்கள் எந்த வட மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
மானம்  குலம்  கல்வி  வண்மை  அறிவுடைமை தானம்  தவர் உயர்ச்சி  தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்.  
இதிலிருந்து என்ன தெரிகின்றது ? இராமாயணத்தின் மூல க்ஷேத்திரம் திராவிட நாடே.  
அனுமன் சீதாப் பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ்.( http://sookta-sumana.blogspot.in/2013/04/sanskrit-and-tamil-were-co-existing.html). இராமனும் அதையேதான் பேசி இருக்க வேண்டும்.
நாமே திராவிடர் !! நாமே ஆரியர் !!!
இதையே பாரதி ‘ஆரிய தேசத்தில் தமிழ் மொழி’ என்றான். இத்தகைய கருத்து தற்போதைய பல தமிழ் கட்சிகளுக்கு அலர்ஜியாக இருக்க கூடிய விஷயமாகும். எதை வைத்து மக்களை பிரித்து ஏமாற்ற ?
அதற்கு நாம் என்ன செய்வது ?
புத்தர் சொன்னபடி ‘உண்மையை உண்மை எனவும், உண்மை அல்லாதவற்றை உண்மை அல்லாதன’ எனவும் அறிவோம்.
இனி ஒரு புது விதி செய்வோம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் !! வாழிய பாரதம் !!!

Saturday, 5 October 2013

Ram and Guha :: நட்பு எனும் கற்பு



கி.பி 7ம் நுற்றாண்டு முதல் கி.பி 18ம் நுற்றாண்டு வரை ,
நம் மீது படை எடுத்து வந்தவர்கள் எல்லாரும் நம்மை வென்று,நம்மை அடிமை படுத்தினார்கள்.( Greeks, Romans, Turks, Persians, Huns, Moguls et al ) உலகமே பார்த்தறியாத மிகப் பெரும் வல்லரசுகளான குப்த பேரரசு, ,மௌரிய பேரரசு, மகத பேரரசு, சோழ பேரரசு ஆண்ட நாடு இந்தியா.

அப்படிப்பட்ட வல்லரசான இந்தியா தோற்று போனது ஏன்?

நமக்கு தென்படும் ஒரே காரணம் பிரிவினை. இந்தப் பிரிவின் மூலாதாரம் சாதியம் (வர்ணாசிரம்) . சாதியம் நம்மை நான்காக பிரித்து, ஒருவருக்கொருவர் எதிரியாக்கி வைத்திருக்கிறது. இராமாயணத்திலும்,மகாபாரதத்திலும் கூறப்பட்ட நட்பு எனும் கற்பை தொலைத்து விட்டு அடிமையாகிப் போனோம். இராமன் குகனை தன் தம்பியாக ஏற்றுக் கொண்டு கூறுகிறான். ( Guha, you are my life ! my brother is your brother! my wife is your relative! We were four before, but with you we are now five !! )

அன்னவன் உரை கேளா, அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் 

துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது; து அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்

              


இந்த நட்பை , நட்பு பாராட்டலை சாதியம் தடுக்கின்றது. இதனாலேயே நாம் தொலைந்து இருக்கிறோம். நம்மால் எந்த ஒரு பொது லட்சியத்துக்கும் குரல்  கொடுக்க முடிவதில்லை. Indian against Corruption, Eeelam war, Pakistan aggression, China aggression இது எதிலும் , நாம் சாதியம் இருக்கும் வரை எதுவும் சாதிக்க வழியில்லை.
ஒரு பொதுக் கருத்து சொல்கையில், முதலில் பார்க்கப்படுவது சொன்னவன் சாதி. தம் சாதிக்காரன் என்றால் ‘ok’, இல்லை எனில் சண்டை. கருத்தின் நியாய, தர்மங்கள் சாக்கடைக்கு போகின்றன.
 

Our politians are masters in playing the caste card and they know how to divide and rule the common people.
                                       
சாதியம் அழிய என்ன வழி ? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 
 

Ghazni ( Ghajini ) and Rajendra Chola

        Mohmud of Ghazni was the most promienent ruler in Afganisthan. He has started raiding India in about 1008. During his rule, he invaded and plundered parts of Hindustan (east of the Indus River) 17 times.
He has raided many cities Nagarkot, Thanesar, Mathura, Kannauj, Kalinjar and Somnath and theie temples. Mahmud's armies stripped the temples of their wealth and then destroyed them at, Maheshwar, Jwalamukhi, Narunkot and Dwarka .

        At the same time in east part of India, the great Rajendra Chola was victoriously progressing towards Bengal, after defeating Kalinga ( Modern Odisha ).


       As fate would have it, both the armies did not meet. Had the Chola made his progression towards west India after reaching Kalinga, the history would have been different.Refer ::Expedition to Ganges ( http://en.wikipedia.org/wiki/Rajendra_Chola_I ).


Wednesday, 2 October 2013

Aryan and Dravidian Gods - Are they one and same ?


ஆரியமா, திராவிடமா? எது வென்றது?
திராவிட (தமிழ்) கடவுள்கள் கண்ணன் ( கிருஷ்ணா ), சிவனார், மாரி அம்மன் மற்றும் பலர். அனைவரும் கருப்பு , நீல நிறத்தினர். நீலம் என்பது கருப்பு நிறத்தின் உச்சமே. ஆரியர்கள் வெள்ளை நிறத்தினர் ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை எனினும், பொதுவான ஒரு அபிப்ராயம் ). அவரின் கடவுள்கள் இந்திரன், பிரம்மா, அக்னி, வருணன் என பலர். இவர்கள் வெள்ளை நிறத்தவராகத்தான் இருக்க வேண்டும்.

தற்சமயம் இந்தியர்களாகிய நாம் சிவன்,விஷ்ணு (கண்ணன் ,கிருஷ்ணா ) போன்ற கடவுள்களைத் தான் வணங்குகிறோம். இவர்கள் அனைவரும் கருமை நிறம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். திராவிடர்கள் ஆகிய நாம் தான் ஆரியர்களை வென்று உள்ளோம்.

Silapathikaram starts with prayers to Moon ( Chandra ), Sun ( Surya ), Rain ( Varuna ).I am putting the verses from Silapathikaram below, does that mean, Dravidians ( Tamils ) are the progenitors of Aryans ?

திங்களைப்  போற்றுதும், திங்களைப்  போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண்
குடைபோன்றிவ்வங்கண் உலகுஅளித்த லான்.

ஞாயிறு போற்றுதும் ,ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் , மாமழை போற்றுதும்
 நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்
Also Manimekalai has mention about the festival of Indra. It mentions that the great Poompuhar city has been deluged because the Pandyan king did not celebrate the Indra festival. So even before that time ( which is unknown, may be about 10000 BC ) Tamils were celebrating the festival of Indra who was the main God of Vedas.
Does that mean Vedas and Tamils have had same gods ?
Does that mean Tamils are Aryans ?