" செவ்விய மலையும்,ஊர்ப் புறமும்
உடைய நாஞ்சில் தலைவனே ! ………..நீ வாழ்க! நின் தந்தையும் தாயும் வாழ்க!!"
என்று
ஒரு வள்ளுவ மன்னனைப் பாடி பரிசு
வேண்டுகிறார் ஒருசிறைப் பெரியனார்(
புலவர் பெயர்தான் ! ) பாடப் பெற்றவன் நாஞ்சில் வள்ளுவன்.
இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,
மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!
ஆனால்,
இன்றைய தேதிப்படி, வள்ளுவன் ஒரு சூத்திரன். பட்டியல் .சாதி. கடந்த காலத்தில், அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ( புறநானுறு காலத்தில் ) வள்ளுவன்
அரசனாக, ஆளும் பரம்பரையாக, க்ஷத்திரியனாக இருந்துள்ளான்.
நாஞ்சில்
வள்ளுவன் என்ற மேற்கூறிய மன்னனை பற்றி
புறநானூற்றில் நான்கு பாடல்கள் உள்ளன. ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார்,
ஔவையார், கருவூர் கதப்பிள்ளை ஆகியோர் அவன் வலிமையையும், வளமையையும் பாடி பரிசு பெற்று
வாழ்ந்தனர்.
‘…..வாழ்தல் வேண்டிப்
பொய்
கூறேன்;
மெய்
கூறுவல்;…..
என்ற
சிறப்புத் தொடர், மருதன் இளநாகனார்
பாடிய பாடலில் வருவதே.
இந்த
வள்ளுவன் அல்லது வள்ளுவம் என்பதே மருவி இன்றைய பள்ளன், பள்ளி, வெள்ளாளன், மள்ளன், கள்ளன்,
மல்லன், பல்லவன், பறையன், புலையன் ஆகின.
சில
ஆயிரமாண்டுக்கு முன், பள்ளன் ஆண்ட பரம்பரை, க்ஷத்திரியன்.
பறையனும்
ஆண்ட பரம்பரையே, க்ஷத்திரியனே.
For
more on philological inferences see ‘On the original inhabitants of
Bharatavarsha or India – The Dravidians’ by Gustav Oppert.