Wednesday, 16 April 2014

யார் சூத்திரன் ? – 3



" செவ்விய மலையும்,ஊர்ப் புறமும் உடைய நாஞ்சில் தலைவனே ! ………..நீ வாழ்க! நின் தந்தையும் தாயும் வாழ்க!!"
என்று ஒரு வள்ளுவ மன்னனைப் பாடி பரிசு வேண்டுகிறார் ஒருசிறைப் பெரியனார்( புலவர் பெயர்தான் ! ) பாடப் பெற்றவன் நாஞ்சில் வள்ளுவன்.

இரங்கு முரசின், இனம் சால் யானை,
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
கண் ணன்ன மலர்பூக் குந்து,
கருங்கால் வேங்கை மலரின், நாளும்
பொன் னன்ன வீ சுமந்து,

மணி யன்ன நீர் கடற் படரும்;
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

ஆனால், இன்றைய தேதிப்படி, வள்ளுவன் ஒரு சூத்திரன். பட்டியல் .சாதி. கடந்த காலத்தில், அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ( புறநானுறு காலத்தில் ) வள்ளுவன் அரசனாக, ஆளும் பரம்பரையாக, க்ஷத்திரியனாக இருந்துள்ளான்.


நாஞ்சில் வள்ளுவன் என்ற மேற்கூறிய மன்னனை பற்றி புறநானூற்றில் நான்கு பாடல்கள் உள்ளன. ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், ஔவையார், கருவூர் கதப்பிள்ளை ஆகியோர் அவன் வலிமையையும், வளமையையும் பாடி பரிசு பெற்று வாழ்ந்தனர்.

‘…..வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;…..
என்ற சிறப்புத் தொடர், மருதன் இளநாகனார் பாடிய பாடலில் வருவதே.

இந்த வள்ளுவன் அல்லது வள்ளுவம் என்பதே மருவி இன்றைய பள்ளன், பள்ளி, வெள்ளாளன், மள்ளன், கள்ளன், மல்லன், பல்லவன், பறையன், புலையன் ஆகின.

சில ஆயிரமாண்டுக்கு முன், பள்ளன் ஆண்ட பரம்பரை, க்ஷத்திரியன். 

பறையனும் ஆண்ட பரம்பரையே, க்ஷத்திரியனே.

For more on philological inferences see ‘On the original inhabitants of Bharatavarsha or India – The Dravidians’ by Gustav Oppert.

Friday, 21 March 2014

நந்தன் எனுமொரு ஞானி ;;


கதைகள், கட்டுரைகள், இட்டு கட்டிய வேதம், புராணம் மூலம் மற்றவரை அடிமை செய்ய முடியுமென்றால், ஏன் மாற்று கதைகள், கட்டுரைகள், வேதம், புராணம் மூலம் வெற்றி பெற்று ஒரு புதிய சமூகம் உருவாக முடியாது ?

நிச்சயம் முடியும்.

நவீன மனு சாஸ்திரம், நவீன வேதங்கள், நவீன புராணங்கள் இவையே நமது இலட்சியம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நந்தன் எனுமொரு ஞானி ;;

சோழ வள நாட்டை நந்தி வளவன் ஆண்டு வந்தான். நந்தி வளவன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், நித்தியானந்த விஷ்ணு சர்மா. தன்னுடைய பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார். தெனாலி  மாறன் அமைச்சர். ஓரளவு நியாயமானவர் என்றாலும் பயந்த குணம், இப்போது நந்தி வர்மனை மீறமுடியாத நிலை.
காளிங்கன் , காலத்தின் கோலத்தால் தாழ்த்தப்பட்ட , நேர்மையான, கடவுளிடம் பக்தி கொண்ட பறையர் இனத்தை சார்ந்தவன். கொற்றவை அவன் குல தெய்வம். காளிங்கன் , தெனாலி மாறனின் நிலத்தில் வேலை செய்து போகத்திற்கு 20 மூட்டை நெல் அளிப்பான். வறட்சி எதுவும் விளையவில்லை என்றால் கூட 20 மூட்டை நெல்லை கடன்வாங்கியாவது அளந்து விடுவான்.
ஒருமுறை அரசனுக்கு  பெரிய ஒரு சந்தேகம் வந்தது. யாராலும் தீர்க்க முடியவில்லை. விஷ்ணு சர்மா, தெனாலி மாறன் இவர்களின் பதில்களும் அரசனுக்கு திருப்தியாக இல்லை.
பறை அறிவிக்கப்பட்டது ‘ அரசன் ஐயத்தை தீரப்பவர்ககு 100 வராகன் பரிசு, அரசு மனைக்கு வந்து ஐயத்தை தீர்த்து பரிசை பெற்று செல்லலாம் ‘
கொற்றவை அருளினால் ஐயம் தெளிவு பெற்ற காளிங்கன் தன் தெளிவை மாறனிடம் கூற,

அதை அவர் அரசனிடம் கூற ஐயம் தீர்ந்து
‘உமக்கு எப்படி தெளிவு வந்தது ? யார் கூறியது’ என்றான்.
தெனாலி மாறன் உண்மை சொல்ல முற்பட, விஷ்ணு சர்மா தடுத்து விட்டான். ‘ராஜாதி ராஜனே, தெய்வமே உனக்காக மாறனுக்கு அருளியது’ என்று கூற அரசனும் சந்தோசப்பட்டு 100 வராகன் பரிசை அளித்தான்.  விஷ்ணு சர்மா அதில் பாதி எடுத்துக்கொள்ள, காளிங்கனும், அவன் மனைவியும், 3 குழந்தைகளும் பாதி வயிற்றுக்கு கூழ் குடித்து தூங்கப்போனார்கள்.
அரசனின் ஐயம் இதுதான். ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா ?’
காளிங்கன் ஒரு சிறிய விளக்கை ஏற்றச் சொன்னான். ‘இந்த சுடரில் சூடு இருக்கிறதா ? எனக்கேட்டான்.
‘இருக்கலாம், , ஆனால் சுடர் சிறிதாக உள்ளதால் உணர முடியவில்லை’
தெனாலி மாறனிடம் காளிங்கன் கூறினான்.
‘கடவுள் இருக்கிறார், உணர்ந்தால் தெரியும்’ 


Sunday, 16 March 2014

ஜாதி, மொழி மற்றும் நாடு


ஜாதி, மொழி மற்றும் நாடு ::

சுய மரியாதை, சுய சிந்தனை, தன்னம்பிகை, தைரியம் இல்லாத பயந்தாங்கொள்ளிகள் ஒளிந்து கொள்ளும் திறமை அற்றவர்களின் கூடாரம் ஜாதி. அமெரிக்கனுக்கு, பிரிட்டிஷ்காரனுக்கு ஏன் பாகிஸ்தானிக்கு கூட அது தேவைப்படவில்லை, நமக்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.
வீரனை விட சூரன் பெரிய வீட்டில் இருந்தால் சாதிச் சண்டை வந்து விடுகிறது. சூரன் தெருவில் வீரன் நடந்தால் சண்டை.

மொழிப்பற்றும், தேசப்பற்றும் இல்லாத காரணத்தினாலேயே இவை. தமிழன் என்று தன் மொழியை நேசிக்கிறானோ,  என்று தன் நாட்டை நேசிக்கிறானோ அன்றுதான் சாதிச் சண்டை ஒழியும்.
நாம் ஒன்றும் மொழிப்பற்றும், தேசப்பற்று,ம் இல்லாதவர்கள் அல்ல. குறளும், அகமும், புறமும் நம் மொழிப்பற்றுக்கு சாட்சி. நாட்டுக்காக தன் உயிரையே  துச்சமாக எண்ணியவர்கள் ( திருப்பூர் குமரன் , தீரன் சின்னமலை, மருது பாண்டியர் …) வாழ்ந்த நாடுதான் இது. மற்றொருமுறை அவற்றை பெற வேண்டும், கடவுள் காப்பாராக !!!

பாரதி சொன்னபடி பெரிய தெய்வம் அருளல் வேண்டும்.