Friday 21 March 2014

நந்தன் எனுமொரு ஞானி ;;


கதைகள், கட்டுரைகள், இட்டு கட்டிய வேதம், புராணம் மூலம் மற்றவரை அடிமை செய்ய முடியுமென்றால், ஏன் மாற்று கதைகள், கட்டுரைகள், வேதம், புராணம் மூலம் வெற்றி பெற்று ஒரு புதிய சமூகம் உருவாக முடியாது ?

நிச்சயம் முடியும்.

நவீன மனு சாஸ்திரம், நவீன வேதங்கள், நவீன புராணங்கள் இவையே நமது இலட்சியம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
நந்தன் எனுமொரு ஞானி ;;

சோழ வள நாட்டை நந்தி வளவன் ஆண்டு வந்தான். நந்தி வளவன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், நித்தியானந்த விஷ்ணு சர்மா. தன்னுடைய பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார். தெனாலி  மாறன் அமைச்சர். ஓரளவு நியாயமானவர் என்றாலும் பயந்த குணம், இப்போது நந்தி வர்மனை மீறமுடியாத நிலை.
காளிங்கன் , காலத்தின் கோலத்தால் தாழ்த்தப்பட்ட , நேர்மையான, கடவுளிடம் பக்தி கொண்ட பறையர் இனத்தை சார்ந்தவன். கொற்றவை அவன் குல தெய்வம். காளிங்கன் , தெனாலி மாறனின் நிலத்தில் வேலை செய்து போகத்திற்கு 20 மூட்டை நெல் அளிப்பான். வறட்சி எதுவும் விளையவில்லை என்றால் கூட 20 மூட்டை நெல்லை கடன்வாங்கியாவது அளந்து விடுவான்.
ஒருமுறை அரசனுக்கு  பெரிய ஒரு சந்தேகம் வந்தது. யாராலும் தீர்க்க முடியவில்லை. விஷ்ணு சர்மா, தெனாலி மாறன் இவர்களின் பதில்களும் அரசனுக்கு திருப்தியாக இல்லை.
பறை அறிவிக்கப்பட்டது ‘ அரசன் ஐயத்தை தீரப்பவர்ககு 100 வராகன் பரிசு, அரசு மனைக்கு வந்து ஐயத்தை தீர்த்து பரிசை பெற்று செல்லலாம் ‘
கொற்றவை அருளினால் ஐயம் தெளிவு பெற்ற காளிங்கன் தன் தெளிவை மாறனிடம் கூற,

அதை அவர் அரசனிடம் கூற ஐயம் தீர்ந்து
‘உமக்கு எப்படி தெளிவு வந்தது ? யார் கூறியது’ என்றான்.
தெனாலி மாறன் உண்மை சொல்ல முற்பட, விஷ்ணு சர்மா தடுத்து விட்டான். ‘ராஜாதி ராஜனே, தெய்வமே உனக்காக மாறனுக்கு அருளியது’ என்று கூற அரசனும் சந்தோசப்பட்டு 100 வராகன் பரிசை அளித்தான்.  விஷ்ணு சர்மா அதில் பாதி எடுத்துக்கொள்ள, காளிங்கனும், அவன் மனைவியும், 3 குழந்தைகளும் பாதி வயிற்றுக்கு கூழ் குடித்து தூங்கப்போனார்கள்.
அரசனின் ஐயம் இதுதான். ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா ?’
காளிங்கன் ஒரு சிறிய விளக்கை ஏற்றச் சொன்னான். ‘இந்த சுடரில் சூடு இருக்கிறதா ? எனக்கேட்டான்.
‘இருக்கலாம், , ஆனால் சுடர் சிறிதாக உள்ளதால் உணர முடியவில்லை’
தெனாலி மாறனிடம் காளிங்கன் கூறினான்.
‘கடவுள் இருக்கிறார், உணர்ந்தால் தெரியும்’ 


Sunday 16 March 2014

ஜாதி, மொழி மற்றும் நாடு


ஜாதி, மொழி மற்றும் நாடு ::

சுய மரியாதை, சுய சிந்தனை, தன்னம்பிகை, தைரியம் இல்லாத பயந்தாங்கொள்ளிகள் ஒளிந்து கொள்ளும் திறமை அற்றவர்களின் கூடாரம் ஜாதி. அமெரிக்கனுக்கு, பிரிட்டிஷ்காரனுக்கு ஏன் பாகிஸ்தானிக்கு கூட அது தேவைப்படவில்லை, நமக்கு மட்டும் தான் தேவைப்படுகிறது.
வீரனை விட சூரன் பெரிய வீட்டில் இருந்தால் சாதிச் சண்டை வந்து விடுகிறது. சூரன் தெருவில் வீரன் நடந்தால் சண்டை.

மொழிப்பற்றும், தேசப்பற்றும் இல்லாத காரணத்தினாலேயே இவை. தமிழன் என்று தன் மொழியை நேசிக்கிறானோ,  என்று தன் நாட்டை நேசிக்கிறானோ அன்றுதான் சாதிச் சண்டை ஒழியும்.
நாம் ஒன்றும் மொழிப்பற்றும், தேசப்பற்று,ம் இல்லாதவர்கள் அல்ல. குறளும், அகமும், புறமும் நம் மொழிப்பற்றுக்கு சாட்சி. நாட்டுக்காக தன் உயிரையே  துச்சமாக எண்ணியவர்கள் ( திருப்பூர் குமரன் , தீரன் சின்னமலை, மருது பாண்டியர் …) வாழ்ந்த நாடுதான் இது. மற்றொருமுறை அவற்றை பெற வேண்டும், கடவுள் காப்பாராக !!!

பாரதி சொன்னபடி பெரிய தெய்வம் அருளல் வேண்டும்.


Wednesday 12 March 2014

நமது பாரம்பரியங்கள்- பூணூல்.



       பூணூல் அணிவதன் மூலமே பிராமணர் தம்மை பிறரிடம் இருந்து வேறுபடுத்தி, உயர்ந்தவர் எனச் சொல்லி மற்றவர்களையும் கூறச் செய்யமுடிகிறது. ஒருவேளை பூணூல் அணியும் வழக்கம் மற்ற குலத்தாருக்கும் இருந்திருந்தால் ? 

       இருந்திருந்தால், தொலைந்து போன ( அல்லது மறுக்கப்பட்ட ) மிகச்சிறந்த பாரம்பரியங்களான கல்வி, பூசை செய்தல், சடங்குகள் நடத்துதல், பிற ஆசாரங்கள், கூடி உணவு உண்ணுதல், கூடி வாழ்தல், தீண்டாமை இல்லா  சமூக அமைப்பு ஆகியவை எல்லா சாதிகளுக்கும் பொதுவானதாக இருந்து இருக்கலாம் என்பதை, கடலில் புதைந்திருக்கும் பனி மலையின் நுனி போல, மறைமுகமாகச் சொல்கிறது.



        பூணூல் என்பது குருவாக இருப்பவர் ஒரு பாலகனைத் தன்னிடம் கல்வி பயில அனுமதிக்கும் சடங்கு. இதன் மூலம் மாணாக்கன் கல்விக்கும் அதைச்சார்ந்த சமூக அங்கீகாரங்களும் ( பூசை செய்தல், பிற சடங்கு நடத்துதல் ) உரியவனாகிறான்.



கி.பி. 1700-ம் ஆணடு.

        வன்னியர், கோனார் ( இடையர் ), பறையர், ஓதுவார், ஆசாரி, செட்டியார், பிள்ளைமார் ( வெள்ளாளர் – பாண்டி, சோழிய மற்றும் பிற ), குருக்கள், மற்றும் பிராமணர்களுக்கும் பொதுவானதாகவே பூணூல் இருந்துள்ளது. ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உண்மை. எப்படி ?
நீங்கள் எப்போதாவது கல்யாணத்திற்கான மளிகைச்சாமான்கள் எழுதி இருந்தால் ஞாபகம் வரலாம், அதில் பூணூல் முக்கியமானதாக இருக்கும். கல்யாண நாளன்று முக்கிய சடங்காக மாப்பிள்ளைக்கு  பூணூல் போடுவர். அதன் பின்னரே பெண் அழைக்கப்பட்டு, தாலி கட்டும் வைபவம் நடத்துவர்.
         மாப்பிள்ளைக்கு பூணூல் போடுவது மேற்கண்ட எல்லா குலத்தினரின் வழக்கமாகும். 
         எட்வர்ட் தர்ஸ்டன் ( Edward Thurston ) கூற்றுப்படி கீழ்கண்ட குலத்தாருக்கு பூணூல் அணியும் வழக்கம் இருந்துள்ளது.
 
பூணூல் அணிபவரா ?
குலம்
சடங்கு

திருமணம்
சாவு சடங்கு
எல்லா நேரமும்
வன்னியர்
ஆம்
ஆம்

கோனார் -இடையர்

ஆம்

பறையர் ( தங்களர் )
ஆம்
ஆம்

ஓதுவார், குருக்கள்


ஆம்
வெள்ளாளர்*
ஆம்
ஆம்

ஆசாரி*


ஆம்
செட்டியார்*


ஆம்
பிராமணர்


ஆம்
         *சில பிரிவினர் மட்டும், உதாரணமாக பொற்கொல்லர் ( ஆசாரி ).

         இன்னும் சில குலங்களில், மகன்களும் மற்றும் பங்காளிகளும்  சாவு சடங்கின் போது பூணூல் போட்டுக் கொள்கிறார்கள். வீட்டுக்கு வருமுன் அவற்றை கழற்றி எறிந்து விடுகின்றனர்.

         இதிலிருந்து நமக்கு தெரிவது ;; பிராமணர்களுக்கு இணையான உரிமைகளை மற்ற சாதியினரும் பெற்றிருந்தனர்.

அப்படியானால் இது அணிவது விட்டுப்போனது எதனால் ?

   சமண, புத்த மத எழுச்சி மற்றும் அதன் வீழ்ச்சி.
இலங்கை, வடங்கை சண்டைகள்.
தொழில் முறைகள் ( மிகவும் நாசூக்கான தொழில் செய்வோர் மட்டுமே தொடர்ந்து அணிந்து வருகின்றனர் )