Saturday, 12 October 2013

இராமன் எனும் திராவிடன் - இனி ஒரு புது விதி செய்வோம் !!

இராமன் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
சீதாப் பிராட்டியார் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது ?
இராமாயணம் சமஸ்கிருத்தில் இருப்பதனாலேயோ, கம்பர் வால்மீகி இராமாயணத்தை முன்னூலாக கொண்டதனாலேயோ  இராமன் வட தெய்வம் ஆகி விட மாட்டான்.
கரிய நிற இராமனை தெய்வமாக இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?
மற்ற கரிய நிற தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும் அதே சமஸ்கிருத்தில் இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்?


இதற்கான சாத்தியக்கூறுகள் இரண்டு.
1.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டை மற்றவரிடம் இருந்து எடுத்துக் கொள்கிறான்.
2.   பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும், முருகனையும் கொண்டாடுகிறான்.
கிருஷ்ணன் ( கண்ணன் ), சிவன், முருகன் எல்லோரும் தமிழ் தெய்வங்கள்தான். சங்க நூல்களை படிக்கவும். முதல் கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
அகம், புறம், குறள், தொல்காப்பியம் என வாழ்வியல், மொழியியலில் ஆயிரம் ஆயிரம் நூற்களை விட்டுச் சென்ற தமிழன்,  தெய்வ வழிபாட்டில் மாபெரும் நூற்களை விட்டுச் செல்லவில்லை. ஏன் ? ஏனென்றால் தன் தெய்வ வழிபாட்டிற்கு தமிழுக்கு ஈடாக, அவன் சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் வழிபாட்டை அதில் மாற்றி, அந்த நூல்களை ‘மறை’ என்றான்.
இங்கே மாற்றான் எவரும் வரவில்லை.
Refer Indologist Pandit Vamadeva Shastri in http://www.vedanet.com/2012/06/myth-of-aryan-invasion-update-2001/ and other blogs for an overview on the theory of Aryans..
இராமாயணத்தில், இராவணனுக்கு பத்து தலைகள். ஏன் பத்து தலைகள் ? இதற்கான ஆதாரங்கள் எந்த வட மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
மானம்  குலம்  கல்வி  வண்மை  அறிவுடைமை தானம்  தவர் உயர்ச்சி  தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம்.  
இதிலிருந்து என்ன தெரிகின்றது ? இராமாயணத்தின் மூல க்ஷேத்திரம் திராவிட நாடே.  
அனுமன் சீதாப் பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ்.( http://sookta-sumana.blogspot.in/2013/04/sanskrit-and-tamil-were-co-existing.html). இராமனும் அதையேதான் பேசி இருக்க வேண்டும்.
நாமே திராவிடர் !! நாமே ஆரியர் !!!
இதையே பாரதி ‘ஆரிய தேசத்தில் தமிழ் மொழி’ என்றான். இத்தகைய கருத்து தற்போதைய பல தமிழ் கட்சிகளுக்கு அலர்ஜியாக இருக்க கூடிய விஷயமாகும். எதை வைத்து மக்களை பிரித்து ஏமாற்ற ?
அதற்கு நாம் என்ன செய்வது ?
புத்தர் சொன்னபடி ‘உண்மையை உண்மை எனவும், உண்மை அல்லாதவற்றை உண்மை அல்லாதன’ எனவும் அறிவோம்.
இனி ஒரு புது விதி செய்வோம்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் !! வாழிய பாரதம் !!!

No comments:

Post a Comment