Saturday, 5 October 2013

Ram and Guha :: நட்பு எனும் கற்பு



கி.பி 7ம் நுற்றாண்டு முதல் கி.பி 18ம் நுற்றாண்டு வரை ,
நம் மீது படை எடுத்து வந்தவர்கள் எல்லாரும் நம்மை வென்று,நம்மை அடிமை படுத்தினார்கள்.( Greeks, Romans, Turks, Persians, Huns, Moguls et al ) உலகமே பார்த்தறியாத மிகப் பெரும் வல்லரசுகளான குப்த பேரரசு, ,மௌரிய பேரரசு, மகத பேரரசு, சோழ பேரரசு ஆண்ட நாடு இந்தியா.

அப்படிப்பட்ட வல்லரசான இந்தியா தோற்று போனது ஏன்?

நமக்கு தென்படும் ஒரே காரணம் பிரிவினை. இந்தப் பிரிவின் மூலாதாரம் சாதியம் (வர்ணாசிரம்) . சாதியம் நம்மை நான்காக பிரித்து, ஒருவருக்கொருவர் எதிரியாக்கி வைத்திருக்கிறது. இராமாயணத்திலும்,மகாபாரதத்திலும் கூறப்பட்ட நட்பு எனும் கற்பை தொலைத்து விட்டு அடிமையாகிப் போனோம். இராமன் குகனை தன் தம்பியாக ஏற்றுக் கொண்டு கூறுகிறான். ( Guha, you are my life ! my brother is your brother! my wife is your relative! We were four before, but with you we are now five !! )

அன்னவன் உரை கேளா, அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ; இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்; நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் 

துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது; து அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்

              


இந்த நட்பை , நட்பு பாராட்டலை சாதியம் தடுக்கின்றது. இதனாலேயே நாம் தொலைந்து இருக்கிறோம். நம்மால் எந்த ஒரு பொது லட்சியத்துக்கும் குரல்  கொடுக்க முடிவதில்லை. Indian against Corruption, Eeelam war, Pakistan aggression, China aggression இது எதிலும் , நாம் சாதியம் இருக்கும் வரை எதுவும் சாதிக்க வழியில்லை.
ஒரு பொதுக் கருத்து சொல்கையில், முதலில் பார்க்கப்படுவது சொன்னவன் சாதி. தம் சாதிக்காரன் என்றால் ‘ok’, இல்லை எனில் சண்டை. கருத்தின் நியாய, தர்மங்கள் சாக்கடைக்கு போகின்றன.
 

Our politians are masters in playing the caste card and they know how to divide and rule the common people.
                                       
சாதியம் அழிய என்ன வழி ? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

 
 

No comments:

Post a Comment